Anbudan Navaneethan
Anbudan oru nodi - போரும் ஒரு காதலும்...
 

MNK Home
Info of TamilNadu
Info of GSM
Info of GPRS
MY PROJECT
Time your PC
காதல்... [LOVE ]
=> LOVE MEEN
=> MNK KAVITHAI
=> Heart Kavithal
=> Kathalar Dhenam
=> Friendship vs Love
=> நீறான காதல்...
=> சேமித்த கணங்களில்...
=> என்னடா நீ...!
=> போரும் ஒரு காதலும்...
=> அகதியான காதல்...
=> இறந்த காதல்...
=> இழப்புக்களின் வரிசையில்...
IMAGE GALLERY
நட்பு FRIENDSHIP
நீயும் தமிழன்தான்.
பொங்கல் திருநாள் 2010..
தோழா நீ எங்கே...
உன்னோடு நான் வாழ....
பிறந்தான் தமிழாய் பிரபாகரன்
உயிரின் தேடல்...
நிலவு...
பதியம்...
Guestbook
Contact
About as
Facebook


Copyrighy © MNK System's

போரும் ஒரு காதலும்...

 
விலங்குகளோடு விலங்காய்
விலங்கு அவிழ்க்க,
விடுதலைக்காய்
விடு தலையை என
ஆயுதம் ஏந்தியபடி
நெடுந்தூரப் பயணத்தில் நான்.
பேய் பிசாசுகளின்
அசுத்த எச்சங்களைச்
சுத்தம் செய்யப் புறப்பட்டுவிட்ட
துப்பரவுத் தொழிலாளியாய் நான்.


அவலங்களின் ஓலங்களுக்குள்
குண்டுகளையே பசிக்கு உணவாய்
தின்று வாழும் எனக்கு
காதலின் சத்தங்கள்
சந்தங்கள் இல்லா சங்கீதமாய்.


கொலுசோ வளையலோ அணியாமல்
ஆயுதங்களையே தலையணையாக்கி
தேசத்தையே
தோழியாய் அணைத்திருக்கும்
நான் எப்படி?
ம்ம்ம்ம்....
உங்கள் மனதை வழி மறித்தேன்.

என்றாலும்
மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே.
இன்று நீங்கள் வழிமறித்து வினவிய
வார்த்தையின் எதிரொலியே
என் குரலாய் இப்போ.


ஈழத்தாய் கண்ணீர் துடைக்க
எம் தேச வரைபடத்தின்
தூசைத் துடைக்க
இழந்திட்ட அத்தனைக்கும்
ஈடு கொடுக்க
பாசம் விட்டு...வீடு விட்டு
புறப்பட்டு விட்ட புயலாய் நான்.
என் நண்பன்
பாதியில் நிறுத்திய கனவைத்
தொடர
என் தோளில் கனமாய் கனவுகளோடு.


நிமிடமும் நொடியும்
என் நிலை எனக்கே தெரியாமல்
குப்பியின் துணையோடு
உலவும் என்னை
என் உலகம் தாண்டி!


ம்ம்ம்...

ஆசைதான்
உங்களோடு வேற்றுலகில் பிரவேசிக்க
அங்கும் நாம் அடிமைகள்தானே!
உடன்பாடு கொஞ்சமும்
இல்லை எனக்கு அதில்.
சிந்திக்கிறேன்
எம் சின்னக் குருத்துகளை.


காதல் கடவுள்போல
எனக்குள்ளும் காதலுண்டு.
என் மண்ணில்...மரத்தில்...என்னில்
உங்களில்...என் இனத்தில்.
நண்பரே
மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
பாரமாய் உங்கள் மனதில் நானிருந்தால்
கொஞ்சம் இறக்கி
எனக்கும் வழி விட்டுச் செல்லுங்கள்.


வசந்தம் தேடும் வாழ்வு உங்களது கனவாய்
சுதந்திரம் தேடும் வாழ்வு எனதாய்.
தேடுவது என்னவோ
சந்தோஷம்தான் இருவரும்
என்றாலும்
இயல்பில் இலக்குகளில்
மாறுபட்டதாய்தானே.



என் வாழ்வு நிரந்தரமற்றதாய்.
இன்று மடியலாம் மண்ணில்
அல்லது நாளை நாளை மறுநாள்.
இனித் தொடரும் நாட்களில்
மாவீரர் துயிலும் இல்லத்தில்கூட ஒருசமயம்
சந்திக்கக் கூடும் நீங்கள் என்னை.
ஒன்று மட்டும்
மண்ணுக்குள் வித்தாகமுன்
மனதிற்குள் வித்தான பெருமை எனக்குள்.


உங்களுக்கும்
உங்கள் வருங்காலச் சந்ததிக்கும்
சுதந்திரக் காற்றைச் சுத்தம் செய்ய
ஆயுதம் ஏந்தி நடக்கிறேன் தோழர்களோடு
தயவு செய்து வழி விட்டு
வாழ்த்திச் செல்லுங்கள்.
சந்திப்போம் முடிந்தால்
மீண்டும் நாம்.
விலங்கு அவிழ்த்த
எம் தாயின் குழந்தைகளாய்!!!
navaneethan
Today, there have been 53945 visitors (211947 hits) on this page!
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free